UNCEASING WAVES

ஐ. சி. ஜீயின் விளையாட்டு

Posted in Politics by Karthick RM on May 16, 2014

ஐ. சி. ஜீ (ICG – International Crisis Group) முன்னால் தலைவரான கரெத் இவான்ஸ் சில நாட்களுக்கு முன்பு ஈழ தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை இல்லை, மற்றும் இனப்படுகொலைப் பற்றின விவாதம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பிரச்சாரம் என்று சொல்லியிருக்கிறார். இனப்படுகொலையிலிருந்து பாதுகாப்பதற்காக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இறைமை (remedial sovereignty) தமிழ் மக்களுக்கு உள்ளதா என்ற கேள்விக்கு இவர் ‘அதையெல்லாம் இப்பொழுது பேசாதீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அவரைப் பொருத்த வரையில், இலங்கை தவறுகள் செய்தது, ஆனால் இப்போதைக்கு இலங்கை அரசாங்கத்தை பொறுப்புள்ள அரசாங்கமாக ஆக்குவது தான் சர்வதேசத்தின் கடமை.

இவான்ஸ் என்பவர் தமிழ் மக்களுக்கு எதிரான போர் நடந்த நேரத்தில் ஐ.சி.ஜீ.யின் தலைமை பொருப்பில் நின்றார். சர்வதேச அரசியல் தத்துவத்தில் (International Political Theory) இவர் ஒரு முக்கிய புள்ளி. ஈழ விடுதலை போராட்டத்துக்கு எதிராக மேற்கத்திய நாடுகளில் ஒரு தவறான கருத்து உருவாக்குவதில் ஐ.சி.ஜீக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. ‘மனித உரிமை’, ‘குழந்தைகள் உரிமை’, ‘பெண்ணுரிமை’ என்ற போர்வையில், புலிகளுக்கு எதிராக ஒரு அறிவிக்கப்படாத தகவல் போர் (undeclared information war) இதுப்போன்ற அமைப்புகள் நடத்தினார்கள்.

இரண்டு வருடத்துக்கு முன், தமிழ்நெட்டில் வந்த ஒரு பேட்டியில், ஐ.சி.ஜீயின் இலங்கை பொருப்பாளரான அலன் கீனன் சர்வதேச விசாரனை நடந்தால், அதில் இனப்படுகொலை விசாரனையையும் சேர்க்கலாம் என்று சொன்னார். இப்போ, திரு இவான்ஸ் அவர்கள் அதைப்பத்தின பேச்சே இப்போ தேவையில்லை என்று சொல்கிறார்.

இதுபோன்ற சர்வதேச அரசுசாரா அமைப்புக்களின் (International NGOs) சதுரங்க விளையாட்டுகளை நாம் கவனிக்க வேண்டும். அதில் காய்களாக நாம் சிக்க கூடாது.

One Response

Subscribe to comments with RSS.

  1. ThamArasn said, on December 7, 2014 at 12:37 am

    இன்னும் விவரங்களுடன் இதைப் பற்றி எழுதுங்கள் சகோ


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: