UNCEASING WAVES

நம்புங்கள்! சிந்தியுங்கள்! தமிழீழம் நாளை பிறக்கும்!

Posted in Liberation Struggles by Karthick RM on May 16, 2014

மரணக் கலாச்சாரத்தைப் புலிகள் பின்பற்றிணார்கள் என்று ராதிகா குமாரசாமி போன்ற ஒரு சில பெண்ணியவாதிகள் பழி சுமத்துகிறார். ஆனால் இனப்படுகொலைக்கு எதிராக, ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் தாயகத்தை மீட்க்கும் ஒரு போராட்டத்தை நடத்துபவனுக்குத் தான் புரியும், புலிகளின் கலாச்சாரம் வாழ்க்கையின் கொண்டாட்டமென்று. இது அவர் பயன் படுத்திய ஒரு சில சொற்களிலிருந்து நாம் அரிந்துக்கொள்ளலாம்.

“வார்த்தைகளும் ஆயுதமே” என்று லத்தின் அமெரிக்க எழுத்தாளர் எடுவார்டோ கலியானோ (Eduardo Galeano) சொன்னார். புலிகள் பயன்படுத்திய ஒரு சில வார்த்தைகளைப் பார்ப்போம். போர் களத்தில் விழுந்த போராளிகளை இறந்துப்போனார் என்று சொல்வதில்லை – காவியமானார் என்று சொல்வார்கள். காவியமான போராளிகளைக் கல்லறையில் பிதைப்பதில்லை – துயிலும் இல்லத்தில் விதைக்கிறார்கள். விதைக்கப்பட்ட போராளிகளைத் தியாகி என்று அழைப்பதில்லை – மாவீரர் என்று அழைக்கிறார்கள். களத்தில் நின்ற கடைசி நாள்வரை, ஒவ்வொரு சொல்லையும் மக்களுக்கு வாழ்க்கையிலும் வெற்றியிலும் நம்பிக்கை தரும் முறையாகப் பாவித்தார்கள்.

ஹுசேன் புல்ஹான் (Hussein Bulhan) என்னும் மனத்தத்துவ விஞ்ஞானி சொல்கிறார், தொடர்ச்சியான, ஓய்வுப்பெராத ஒடுக்குமுறையைச் சந்திக்கும் மக்களுக்கு வாழ்க்கையில் வெறுப்பு வந்து, தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் நோக்கங்கள் வரும். இது இனப்படுகொலை புறியும் அரசின் ஒரு உளவியல் போர் தந்திரம். மனச்சோர்வு, குழப்பம், “அய்யோ இப்படி ஆயிருச்சே” என்ற வருத்தம், அரசியலிலும் போராட்டத்திலும் அவ நம்பிக்கை, மரண ஆசை, போதையின் மீது காதல், வாழ்க்கையிலிருந்தும் சொந்த மக்களிடமிருந்தும் தப்ப வேண்டும் என்ற ஆசை – இது அத்தனையும் உளவியல் போர் உண்டாக்க கூடும். முள்ளிவாய்க்காலுக்குப் பின், இந்த உளவியல் போருக்கு பலியான பல நபர்களை நம்மாள் அடையாளம் கான முடியும்.

இதனை எதிர்க்க ஒரே வழி தான். நம்பிக்கை. ஒவ்வொரு விடுதலைப் போராட்டத்தின் அஸ்த்திவாரமே நம்பிக்கை தான். வாழ்க்கையின் மீது, மக்களின் மீது, உங்கள் கலாச்சாரத்தின் மீது, உங்கள் மொழியின் மீது, உங்களின் மீது… மிகவும் முக்கியமாக, உங்கள் மாவீரர்களின் மீது, தலைவரின் சிந்தனை பள்ளியின் மீது.

நம்பிக்கையின் இனைப்பிரியா சகோதரி சிந்தனை. நம்பிக்கை இல்லாத சிந்தனை தோல்வி மனப்பான்மையையும் துரோக அரசியலையும் உண்டாக்கும். சிந்தனை இல்லாத நம்பிக்கை எங்கும் போகாத பாதைக்குள் இழுத்துச்செல்லும்.

நம்புங்கள். சிந்தியுங்கள். தமிழீழம் நாளை பிறக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: